மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

220 0

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதில், அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக மகிழ் திருமேனி இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வாலி, வில்லன் உள்ளிட்ட பல படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

CINEMA NEWS:ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’ படம் – இந்திய சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

Posted by - February 29, 2024 0
மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில்…

கேம் சேஞ்சர் :விமர்சனம்

Posted by - January 10, 2025 0
  கதைக்களம் ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில்…

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

Posted by - June 1, 2023 0
விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!   போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *