மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ!!!

83 0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார், அவரின் நோக்கம் நிறைவேறியதா?

கதைக்களம்

சிவா, கிரேஸ் கணவன், மனைவி இருவரும் மதம் மாறி திருமணம் செய்கிறார்கள். அதனாலேயே பெற்றோர்கள் ஆதரவு இல்லாமல் சென்னையில் இருக்க, அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, பையனை மிகப்பெரிய ஆட்கள் படிக்க வைக்கும் பள்ளி, பைக் கூட EMI என வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் இருவரும் வேலைகாக வேறு வேறு இடத்தில் இருக்க, பையனை 4 சுவர்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, இண்டர்நெட் தான் உலகம் என்பது போல் அந்த பையனும் வளர்கிறான்.

ஒரு நாள் அப்பாவுடன் வெளியே வரும் போது EMI காரனுக்கு பயந்து சிவா தன் பையனை அழைத்துக்கொண்டு தன் பொற்றோர் வீட்டுக்கு பைக்-லேயே செல்கிறார்.

அப்படி செல்லும் போது இவர்கள் சந்திக்கும் இடம், மனிதர்கள், மகனின் தவிப்பு, ஆசை, ஆர்வம், விருப்பம், நாம் எந்த மாதிரி வாழ்கை வாழ்கிறோம் என்பதன் பயனமாகவே இந்த பறந்து போ செல்கிறது.

படத்தை பற்றிய அலசல்

சிவா திரையில் தோன்றினாலே சிரிப்பு வரும் பலருக்கு, அவரை வைத்து பெரிய எமோஷ்னல் ட்ரை பண்ணுவேன் என்றில்லாமல் அவரின் ஹியுமர் சென்ஸை பயன்படுத்தி எமோஷ்னல் கதபாத்திரம் கொடுத்ததிற்கு ராம்-க்கு ஒரு பூங்கொத்து.

அதையும் சிவா அவ்வளவு அழகாக் செய்துள்ளார், தன் மகனை கோபமாக அடித்துவிட்டு, பிறகு அவன் சாப்பிடமாட்டேன் என சொல்லிவிட்டு சிவா வைத்துள்ள நூடல்ஸை சாப்பிட்டதும் சிரித்து கடந்து செல்வது என சிவா செம ஸ்கோர் செய்துள்ளார்.

படமே ஒரு அப்பா-அம்மா-மகன் இவர்கள் மூலம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதே திரைக்கதையாக ராம் கொடுத்துள்ளார், அதில் EMI அடைக்க ஓடும் இந்த உலகில் குழந்தைகளுடன் நாம் எவ்வளவு நேரம் எப்படியெல்லாம் செலவிட வேண்டும் என்பதன் அர்த்ததை ராம் மிக அழகாக காட்டியுள்ளார்.தன் சிறு வயது க்ரஸ் அஞ்சலி வீட்டிற்கு செல்லும் சிவா, அங்கு அஞ்சலி கணவர் அஜு வர்கீஸ் நடத்தும் ஹோட்டல், நிறைய பேர் ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு இந்த காசு போதும் அதனால் இவ்வளவு தான் தினமும் செய்வேன் என கூறுமிடத்திலிருந்து எதோ புத்தருக்கு போதி மரம் போல் ஒவ்வொரு காட்சியும் நமக்கு பாடமாக அமைகிறது.

சரி காடு, மழை, சின்ன ஹோட்டல் என்று ஒருவர் வாழ்க்கை இருக்க, அன்பு(சிவா மகன்) பள்ளி தோழி ஜென்னா வீடோ மிகப்பெரும் மாளிகை, அங்குள்ளவர்கள் கூட தங்கள் குழந்தைகளுகாக நேரம் செலவிடுகிறார்கள் எதோ ஒரு விதத்தில், அங்கு தன் மகன் முன்பு தோற்ற விட கூடாது சிவா போடும் ஆட்டம் என அனைத்து காட்சியும் ரசனை தான்.

வாத்து முட்டை தான் நமக்கு கிடைப்பது, அதிலிருந்து டைனோசர் வராது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், அதில் டைனோசர் வரும் என நம்புவதே தானே சுவார்ஸ்யம் என ஹீரோயின் க்ரஸ் பேசும் வசனம் ஒவ்வொரு மிடில் க்ளாஸ் மக்களின் பிரதிபலிப்பு தான்.

க்ளாப்ஸ்

அனைவரின் நடிப்பும்.

படத்தின் வசனம் மற்றும் திரைக்கதை

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் அன்பு பெற்றோர்களை ஓட விடுவது, கொஞ்சம் அட என்னப்பா இது திரும்ப திரும்ப என தோன்ற வைக்கிறது.

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ படம்.

Related Post

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

Posted by - October 24, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில்…
Generated Image November 17 2025 10 53AM

வசூலில் தெறிக்கவிடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது பட கலெக்ஷன்… இதுவரை எவ்வளவு?

Posted by - November 17, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்பாவம்…

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ

Posted by - June 10, 2025 0
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தக் லைப் படம் அதிகம் விமர்சனங்க தற்போது சந்தித்து வருகிறது. கடும் ட்ரோல்கள் காரணமாக வசூலும்…

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

Posted by - April 2, 2024 0
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *