ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டி வருமா.? வைரலாக பரவும் மெசேஜ் – உண்மை என்ன.?

242 0

#diwali #dress #diwalidress #purchase #diwalidresspurchase #textail #redymade #cotton #gst #Gstprice #gsttax #fact #gst2500 #taxtextails

தீபாவளி நெருங்கும் நிலையில், ரூ.2,500-க்கு மேல் ஆடைகள் வாங்கினால் பில்லை பிரித்துப் போடுங்கள், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகும் என்ற குறுந்தகவல் வைரலாக பரவி வருகிறது. இதில் உண்மை என்ன.? தெரிந்துகொள்வோம்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், கடந்த சில நாட்களாக, ஜவுளிக் கடைகளில் 2,500 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கும்போது, பில்லை பிரித்துப் போடுமாறும், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகிவிடும் என்றும் ஒரு குறுந்தகவல் வைரலாக பரவி வருகிறது. இதில் உண்மை என்ன.? தற்போது தெரிந்துகொள்ளலாம்.

ஜிஎஸ்டி-யில் கொண்டுவரப்பட்ட மாற்றம்

சரக்கு மற்றும் சேவை வரி, அதாவது ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு, கடந்த 22-ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜிஎஸ்டி-யில் 5, 12, 18, 28 என நான்கு அடுக்கு வரி இருந்தது. ஆனால், சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி-யில் 5, 18 என்ற இரண்டு அடுக்கு வரி மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்த நிலையில், சில பொருட்களின் விலை மட்டும் சற்று அதிகரித்துள்ளது. அதில், குறிப்பாக நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகளுக்கான வரியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,500-க்கு மேல் ஆடை வாங்கினால் ஜிஎஸ்டி அதிகமா.?

பண்டிகை காலம் என்றாலே மக்கள் ஆடைகள் வாங்குவதற்காக படையெடுப்பார்கள். அதிலும், தீபாவளி என்றால் ஸ்பெஷல் தான். ஆடைகளை வாங்கி குவித்துவிடுவார்கள். அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வருவதால்,  இப்போதிலிருந்தே ஆடைகளை வாங்க, ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிடும்.

இந்நிலையில், புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகளின்படி, நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகளுக்கான வரி மாற்றத்தின்படி, ஒரு ஆடையின் விலை 2,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதற்கு ஏற்கனவே இருந்த 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மை அறியாமல் வைரலாகும் குறுந்தகவல்

இந்த நிலையில், இந்த உண்மையை அறியாமல், மொத்தமாக ஜவுளி வாங்கும்போது 2,500 ரூபாய்க்கு மேல் பில் வந்தால், அதை பிரித்துப் போடும்படியும், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகிவிடும் என்றும் ஒரு குறுந்தகவல் சில நாட்களாக வைரலாகி வருகிறது.

ஒரு ஆடையின் விலை மட்டும் 2,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த ஆடைக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி 18 சதவீதமாக போடப்படும் என்றும், அதற்கு கீழ் விலை உள்ள துணிகளை மொத்தமாக எவ்வளவு தொகைக்கு வாங்கினாலும், அதற்கு 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி போடப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் ஜவுளி எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், இந்த குறுந்தகவலால் கடைக்காரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் இது குறித்த உண்மையை தெரிந்துகொண்டால் நல்லது என அவர்கள் கருதுகின்றனர்.

Related Post

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

Selfie Video எடுத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் சத்தம், வெளியான தரமான வீடியோ!

Posted by - December 30, 2023 0
#NellaiWelcomesTHALAPATHY pic.twitter.com/oxXyD3SuJr — RAJA S (@Raja01_Tvk) December 30, 2023 நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை…

பொதுச்செயலாளரான எடப்பாடி… இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

Posted by - March 29, 2023 0
பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென்…
admk dmk

DMK ADMK Alliance: இது லிஸ்ட்லயே இல்லயே! விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக கூட்டணியா? என்ன நடக்கிறது?

Posted by - May 7, 2026 0
பெரும்பான்மை இல்லாமல் தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறும் சூழலில், திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று…

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - December 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *