வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

177 0

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசை அமைத்திருந்தார். படைத்தலைவன் கதை யானை மீது வேலு குடும்பம் மிகுந்த பாசம் வைத்து வளர்கின்றனர். ஆனால் கடன் நெருக்கடியால் அந்த யானையை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். அதனால் என்னென்ன சிக்கலை சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

அதோடு இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். ரமணா படத்தின் கெட்டபில் விஜயகாந்தையை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது படைதலைவன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.

சண்முக பாண்டியன் படை தலைவன் முதல் நாள் கலெக்ஷன்

அதாவது வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட 50 லட்சம் வசூலித்திருக்கிறது. இப்படம் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதுவே சமீபத்தில் வெளியான தக் லைஃப் படம் நேற்றைய தினம் கிட்டத்தட்ட 60 லட்சம் வசூலை பெற்றிருந்தது.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியான தக் லைஃப் படம் இவ்வளவு குறைவான வசூலை பெற்றிருக்கிறது. ஆனால் படை தலைவன் முதல் நாளே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கலெக்ஷனை அள்ளி இருக்கிறது.

அதோடு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என படக்குழு நம்புகிறது. விஜயகாந்தின் வாரிசு என்பதை தனது நடிப்பின் மூலம் இந்த படத்தில் சண்முக பாண்டியன் நிருபித்து இருக்கிறார்.

Related Post

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே

Posted by - September 16, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே…

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

Posted by - January 17, 2025 0
பிக் பாஸ் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை…

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!

Posted by - March 8, 2025 0
குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.மைத்திரி மூவி மேக்கர்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *