விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

189 0

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அவர் உயிரிழந்த பிறகு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி MLA ஆனார். தற்போது அவரது மறைவை தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி.

2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியலில் entry கொடுத்துள்ள விஜய் இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான ட்ரைலராக திமுகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் போட்டி போடலாமா என விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் அதிமுகவின் திட்டம் என்ன என்பதை சுற்றி கேள்விகள் வலம் வருகின்றன. ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டி போடவில்லை என பின்வாங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். அதனால் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ள அதிமுக, அதனை கணக்கு போட்டும் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. விஜய்யின் தவெக இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் களம் திமுக vs தவெக என மாறும் என்பதை கணக்கிட்டே அதிமுக காய்களை நகர்த்தவிருப்பதாகவும் சொல்கின்றனர். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போலவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் விஜய் புறக்கணிப்பாரா அல்லது திமுகவுக்கு எதிரான போட்டியாக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Related Post

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…
Generated Image November 13 2025 10 04AM

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Posted by - February 17, 2025 0
பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தனியார் ஊடக நிறுவனமான விகடன் தனது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *