திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5 ஜி சேவை தொடக்கம் – 134 நகரங்களில் 5 ஜி அளித்து சாதனை

239 0

Jio 5G in Tiruppur : ஜியோ 5ஜி தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை இன்று தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அண்மையில், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உட்பட 6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அதிவேக சேவையை வழங்கும் ஜியோ நிறுவனம் இன்று (ஜனவரி 17) 7 மாநிலத்தில் 16 புதிய நகரங்களில் ட்ரு 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார் நகரத்தில், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி ஆகிய நகரங்களிலும், கேரளாவில் கன்னூர், கொட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலுங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனுடன் மொத்தம் 134 நகரங்களில் சேவையைத் தொடங்கி அதிக நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகின்ற ஒரே நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. மேலும் இந்த நகரங்களிலுக்கு Jio’s Welcome Offer அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரில் வாடிக்கையாளர்கள் 1 Gbps வேகத்தில் அளவற்ற இணையச் சேவையை அனுப்பவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவில் 5 ஜி சேவை வழங்கப்படும் நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Jio’s Welcome Offer பெறுவதற்கான இணைப்பு அனுப்பப்படும். அதன் மூலம் ரூ.239 திட்டம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வேகத்தில் அளவற்ற 5ஜி சேவை எந்தவித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்.

ஜியோவின் அதிவேக இணையச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் இ-கவர்ணஸ், கல்வி, அட்டோமொபைல், ஏஐ, இணைய விளையாட்டு, உடல்நலம், விவசாயம், ஐடி போன்ற பகுதிகளில் உள்ள வாய்ப்புகளினால் பயன்பெற்று வளர்ச்சி அடைய முடியும்.

மேலும் இது குறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜியோ 5 ஜி சேவையைத் துரிதமாக வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது.

Related Post

என்னங்க இப்படி சொல்லிடீங்க : இந்தியன் 2வை மோசமாக விமர்சித்த நடிகை ரச்சிதா..!!

Posted by - July 15, 2024 0
கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் இப்படத்தை மோசமாக விமர்சித்துள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தி…
Generated Image November 22 2025 5 37PM

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

Posted by - December 20, 2024 0
தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள்,…

மக்களே அலெர்ட்.. இன்று இந்த 17 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..!

Posted by - November 22, 2023 0
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *