வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

229 0

திருப்பதி:

சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆந்திராவில் அதிர்ச்சி: 2 நாட்களில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை | 9 Andhra  School Students Die By Suicide In 48 Hours - hindutamil.in

மேலும் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களது காதலை கண்டித்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். வேறு சாதியை சேர்ந்த வாலிபரை மகள் காதலிப்பதை கீர்த்தியின் தந்தை அவமானமாக கருதினார்.

எவ்வளவு கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்திப்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். கீர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரவியது.

காதலி இறந்த தகவல் அறிந்த கங்காதரன், பங்காருபேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Post

ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

Posted by - January 5, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை,…

குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

Posted by - March 12, 2025 0
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் புதுச்சேரியில் 21 வயது முதல் 55…

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்

Posted by - July 4, 2023 0
மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி…

பங்குச் சந்தை சரிவிற்குப்பின் கவனம் பெற்ற பங்குகள்.. இன்னைக்கு கவனிக்காம விட்ராதீங்க!

Posted by - August 6, 2024 0
அமெரிக்க, ஜப்பான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை கடும் இழப்பை ஆகஸ்ட் 5 அன்று சந்தித்தது. இந்நிலையில் இன்று சந்தையில் கவனம் பெறப்போகும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *