முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி

379 0

ஆயிரம் பொய் சொல்லி யாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது.

இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம் பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து திருமணம் செய்ததால் முதலிரவு அன்றே குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம் பெண். இவர் தவறான உறவால். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல சம்பளத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது.முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி |  Tamil News Bride complains of stomach ache, gives birth day after wedding

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்தனர். பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதே என கேட்டனர். அப்போது சமீபத்தில் பெண்ணுக்கு கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் தான் அவரது வயிறு வீங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் குறைந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறி சமாளித்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி டெல்லியில் வாலிபருக்கும் இளம்பண்ணுக்கும் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஐதராபாத் வந்துவிட்டனர்.

திருமணத்தன்று இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார். தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார். உள்ளே வந்ததும் மனைவியை அன்போடு மாப்பிள்ளை வரவேற்றார். அப்போது கட்டிலில் அமர்ந்த மணப்பெண் திடீரென வயிறு வலியால் துடித்தார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறி அலறி கூச்சலிட்டார். இதனால் பதறிப் போன மாப்பிள்ளை உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். காரில் இளம் பெண்ணை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இளம்பெண் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர் . இதனைக் கேட்டதும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு ஆத்திரமும் ஏற்பட்டது. இதற்கிடையே இளம் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர் இது குறித்து உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து உடனடியாக நோய்டா சென்றனர்.

மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் .அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டோம். நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாப்பிள்ளையிடம் கெஞ்சினர். ஆனால் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்தனர்.இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து நொய்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் மணமகனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Posted by - November 28, 2022 0
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா?

Posted by - April 19, 2025 0
– மத்திய நிதியமைச்சகம் மறுப்பு! 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என…

ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

Posted by - July 17, 2025 0
இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *