காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

290 0

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.சூடான் தீ விபத்து: 23 பேர் பலி, 3 தமிழர்களை காணவில்லை - விரிவான தகவல்கள் -  BBC News தமிழ்

சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் பலனில்லை. அதற்கு மாறாக தீ பேக்கரி முழுவதும் பரவியது. உடனே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் பேக்கரி கடையில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள உணவு வகைகள், இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இறுமாப்புடன் சொல்கிறேன்…. – தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி

Posted by - December 7, 2024 0
தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக…
erfgn e1778562351324

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Posted by - May 12, 2026 0
சென்னை: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய்…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

Posted by - November 7, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted by - January 8, 2024 0
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *