அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா…

271 0

மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், டி.ஆர்.பி ராஜாவுக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். டி.ஆர்.பி.ராஜாவின் அப்பாவும் எம்.பியுமான டி.ஆர்.பாலு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

Related Post

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

Posted by - February 19, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல்,…

மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70-ஐ தாண்டுகிறது? கால்நடைகள் இறந்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம்

Posted by - December 22, 2023 0
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - April 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் – வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

Posted by - May 7, 2024 0
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *