Director Bharathiraja passes away

Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

67 0

Director Bharathiraja passes away : இயக்குனர் பாரதிராஜா மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் அவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த நிலையில், அவரது பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.

பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும். திரைப்படத் துறையினருக்கும். ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் பிரார்த்திக்கிறேன். இளைப்பாறதிரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி. அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

திரைத்துறையில் சாதித்த பாரதிராஜா

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்! தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – ‘இசைஞானி’ இளையராஜா – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு- இபிஎஸ்

இதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Related Post

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை தடாலடியாக உயர்த்திய மத்திய அரசு!

Posted by - April 7, 2025 0
 விலை அதிகரிப்பால் மானிய விலையில் பெறும் கேஸ் சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்க உள்ளது. வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலையை…

நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்

Posted by - September 19, 2023 0
புதுடெல்லி: மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள்…
CRIME NEWS

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - February 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *