ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி

139 0

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தெய்வச்செயலுக்கு எதிராக புகார் அளிக்க, பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி (தற்போது நீக்கப்பட்டுள்ளார்) மீது அரக்கோணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை வரை சென்ற பாதிக்கப்பட்ட மாணவி, அவர் மீது புகார் அளிக்க முயற்சித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு சென்ற மாணவி:

திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான தெய்வச்செயல், இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அரசியல்வாதிகளுக்கு இரையாக்கி வருவதாக மாணவி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசுகையில், ’20 வயது பெண்களை காதலிப்பதாகக் கூறி, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வதே தெய்வச்செயலின் குறிக்கோள்.

ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்ணை தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு தினமும் டார்ச்சர் செய்து கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டார்.

திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக பாலியல் புகார்கள்:

இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன் என மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து திமுகவிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே ராணிப்பேட்டை காவல் நிலையத்திலும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்தார். இந்த சூழலில், தனது புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும் மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தெய்வச்செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. ஆனால், முன் அனுமதி பெறாத காரணத்தால் ஆளுநரை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

Related Post

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்..

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை…

தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

Posted by - January 20, 2023 0
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. தமிழகத்தில் தனியார் பாலின்…

மலைக்கோட்டை மதில் சுவரில் நீர்கசிவு- தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

Posted by - July 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது. இக்கோட்டையானது 16-ம்…

ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026

Posted by - March 29, 2025 0
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *