இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

322 0

சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை  பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம் | Tamil News Chandrayaan 4 ISRO to bring  back soil samples ...

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, “சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் 6 மாதங்களாகும். இது முந்தைய திட்டங்களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள்ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மட்டும் 350 கிலோவாகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளையிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணற் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்ற மாதிரிகளை எளிதாகச் சேகரிக்க முடியும்.

அதேபோல், சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில்தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாகும்” என்றனர்.

Related Post

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

தி.மலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?

Posted by - December 3, 2024 0
இந்நிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். அவ்வப்போது…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

Posted by - February 14, 2025 0
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு…
ss

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *