இன்று நெல்லை வரும் அமித்ஷா.. நயினார் வீட்டில் விருந்து..! விஜய்க்கு எதிராக வியூகம் வகுப்பாரா?

175 0

திருநெல்வேலியில் இன்று நடக்கும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று வருகிறார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக தமிழ்நாட்டில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது.

திருநெல்வேலி வரும் அமித்ஷா:

இந்த பரபரப்பான சூழலில், தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். கேரளாவில் இன்று மதியம் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அமித்ஷா வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் அமித்ஷா அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்குச் செல்கிறார்.

நயினார் வீட்டில் விருந்து:

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வரும் அமித்ஷா அங்கிருந்து பெருமாள்புரத்தில் அமைந்துள்ள என்ஜிஓ காலனியில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் செல்கிறார். நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித்ஷாவிற்கு தேநீர் விருந்துக்கு அளிக்கப்படுகிறது.

பின்னர், நயினார் நாகேந்திரன் வீட்டில் இருந்து இன்று திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்கிறார். வண்ணாரப்பேட்டை வழியாக பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்கு வரும் அமித்ஷா மதியம் 3.20 மணியளவில் பங்கேற்கிறார்.

தவெக பற்றி பேசுவாரா?

இந்த பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் தமிழ்நாட்டில் பாஜக-வை வலுப்படுத்துவது எப்படி? பாஜக-வின் வாக்குகளை எப்படி அதிகரிப்பது? வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடனான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சி என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் பற்றியும் இந்த பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கை எதிரி என்று பாஜக-வையே குறிப்பிட்டு வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு:

மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் பாஜக- அதிமுக கூட்டணியை மிக கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா பங்கேற்கும் இந்த மாநாட்டில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தர்ராஜன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு ஒட்டுமொத்த திருநெல்வேலியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயுதப்படை மைதானம் முதல் விழா மேடை வரை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமித்ஷாவின் வருகைக்கு பிறகு தமிழக பாஜக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் மேலும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டிற்காக தமிழ்நாடு வரும் அமித்ஷா தமிழக பாஜக-வின் தலைவர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரன் வீட்டில் இந்த ஆலோசனை நடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர்களுக்கு சில தனிப்பட்ட உத்தரவுகளை அமித்ஷா வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

aiadmk eps

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

Posted by - April 23, 2026 0
மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி,…
Generated Image February 09 2026 3 52PM

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…
Untitled 1

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…
sss 2

சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் – வதந்தி வாய்கள்

Posted by - March 21, 2026 0
தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது. TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
Gemini Generated Image q70qvaq70qvaq70q

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது..

Posted by - April 9, 2026 0
நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *