எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

153 0

தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன..

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த குற்றம், சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வந்த தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆகச்சிறந்த எதிர்க்கட்சியாகக் காத்திரத்துடன் செயல்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெனிக்ஸ் கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு திமுக பல்வேறு போராட்டங்களை அறிவித்து வந்தது. திமுகவுடன் சமூக ஆர்வலர்களும் திரை நடிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்

இந்த நிலையில், நாட்டின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த அதிர்ச்சி சற்றே குறையும் முன்பாகவே, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியானது. அது எப்படி? குற்றவாளி, அந்த சாருடனும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், அந்த சார் யார்? அமைச்சர்கள் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்று கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு விட்டதாக திமுக அரசு பதிலளித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டாமா?

எனினும் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்  நின்ற தமிழ் திரையுலகினர் இப்போது ஏன் அமைதி காக்கின்றனர் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. கமல்ஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருந்தார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்து, பிற கூட்டணிக் கட்சியினர் யாரும் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை.

அமைதிக்கு என்ன காரணம்?

திரையுலகினரின் அமைதிக்கு என்ன காரணம்? ஆளும் கட்சி திமுக என்பதாலா? அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற சொல்லப்படுவதாலா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் , மோகன் ஜி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

Posted by - April 11, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாஜக தமிழ்நாடு…

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

Posted by - June 18, 2023 0
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான்…

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

Posted by - April 22, 2023 0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *