சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

245 0

விசாகப்பட்டினம் :

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 10 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த நோட்டுகளை சூரிபாபு என்ற இடைத்தரகரிடம் கொடுத்தனர். பணத்தை மாற்றிய சூரிபாபு, ரூ.90 லட்ச ரூபாய்க்கு ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஆந்திர ஆயுதப்படை போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, ஊர்க்காவல் படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.Delhi police arrest civil engineer for posing as OSD to Amit Shah -  Rediff.com

சூரிபாபுவின் காரையும் சோதனையிட்ட அவர், அதில் ஒரு பையில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டு கட்டுகள் இருப்பதைக் கண்டார். அதுகுறித்து ஸ்வர்ணலதா விசாரித்தபோது, சூரிபாபு திக்கி திணறியுள்ளார். அதையடுத்து ஸ்வர்ணலதா, தனக்கு ரூ.20 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல்லும்படியும், இல்லாவிட்டால், ஆவணமின்றி கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது பெண் இன்ஸ்பெக்டருடன் பேரம் பேசிய சூரிபாபு, கடைசியில் ரூ.12 லட்சத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் விக்ரமாவிடம் புகார் அளித்தனர். அதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, இடைத்தரகர் சூரிபாபு, ஊர்க்காவல் படையினர் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா, சினிமா மோகத்தில் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர், பிரபலமான தெலுங்கு சினிமா பாடல்களுக்கு நடனமாடி ‘யூடியூப்’பில் பதிவேற்றி வந்தார்.

அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், ஸ்வர்ணலதாவை சந்தித்த ஒருவர், ‘உங்கள் அழகுக்கு நீங்கள் சினிமாவில் நடித்தால் ‘ஓகோ’ என்று வருவீர்கள்’ என்று கூறினாராம். அதையடுத்து சினிமா கனவில் மிதந்த ஸ்வர்ணலதா, அதை தானே நிறைவேற்றும் வகையில் ‘ஏபி 31’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அதில் கதாநாயகியாகவும் அவரே நடிக்கிறாராம். சினிமா தயாரிப்புக்கு நிறைய பணம் தேவை என்பதால் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். சினிமா ஆசை, பெண் இன்ஸ்பெக்டரை சிறையில் தள்ளிவிட்டது.

Related Post

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023 0
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *