எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

363 0

80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

அப்பத்தாவின் 40% சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஜீவானந்தம் மீது ஆதிகுணசேகரனும் அவரது தம்பிகளும் கொலை வெறியில் இருக்கிறார்கள். சொத்துக்காக இல்லாவிட்டாலும் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துக் கொள்ள ஜனனியும் அவரது அக்காக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தனை நாள் சுயநினைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பத்தா நேற்று கண் விழித்ததோடு எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்ள குடும்பத்தினர் அனைவரும் பேச்சு கொடுத்தனர். ஆனால் எப்போதும் போல் குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவரை சமாளிக்க நந்தினியும், ரேணுகாவும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மனுஷன் விடுவதாய் இல்லை. இன்றைய எபிசோடிலும் அது தொடர்கிறது. இருக்கிற எல்லா பெண்களும் கிரிமினலாய் இருந்தால் என்ன செய்வது? 80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என ஆக்ரோஷமாக கத்துகிறார் குணசேகரன்.

மறுபுறம் ஜனனி தனியாக ஜீவானந்தத்தை சந்திக்க சென்றிருக்கிறாள். இன்னொரு பக்கம் கிள்ளி வளவனும் கதிரும் அவர் கதையை முடிக்க வெறி கொண்டு அலைகிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார் ஜீவானந்தம். தன்னை தேடுபவர்களிடம் அகப்படுவாரா அல்லது எஸ்கேப் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

பிரியாணி பிரியரா நீங்க.? பின்னாடியே இருக்குற ஆபத்து பெரிசு…

Posted by - June 18, 2025 0
உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம்…

வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

Posted by - January 29, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில்…

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - October 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *