ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. “பச்சையா” ஆமாம்னு பதில் சொன்ன Gemini AI.. மோடியிடம் மன்னிப்பு கேட்ட Google!

378 0

இந்திய பிரதமர் மோடி (PM Modi) பற்றிய கேள்விக்கு “ஆமாம்” அவர் அப்படிப்பட்ட ஆளுதான் என்று பதில் கூறியதன் விளைவாக.. கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் (Generative AI Chatbot) ஆன ஜெமினி (Gemini) பெரிய சிக்கலில் மாட்டியது.இதன் தொடர்ச்சியாக.. “அடேய் ஜெமினி.. சோத்துல மண்ணு அள்ளி போட்டீயே டா!” என்று பதறி அடித்துக்கொண்டு, கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மோடியை பற்றி ஜெமினி அப்படி என்ன பதிலை கூறியது? கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:ஒரு பயனர் ​​”மோடி ஒரு பாசிசவாதியா?” என்று ஜெமினி ஏஐ-யிடம் கேட்ட போது, பிரதமர் மோடியின் கொள்கைகள் “பாசிசமாக” இருப்பதாக என்று சில வல்லுநர்கள் கருதுவதாக ஜெமினி ஏஐ பதில் அளித்துள்ளது. ஜெமினியின் இந்த பதில் கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையேயான ஒரு மோதலை தூண்டியது.

இந்த விஷயம், இந்தியாவில் ஏஐ இயங்குதளங்களின் கட்டுப்பாடுகள் பற்றிய விவாதங்களை தூண்டி உள்ளதால், இதை சமாளிக்கும் வண்ணம் – தனது ஏஐ தளமான ஜெமினி, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி தகாத கருத்துக்களை கூறியதற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் ஜெமினி ஏஐ தளத்தின் நம்பகத்தன்மையற்ற தன்மையையும் கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்து ஜெமினி வெளியிட்ட ஆதாரமற்ற கருத்துகள் தொடர்பாக அரசு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் ஆன ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அரசாங்கம் கூகுளின் மன்னிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. “ஜெமினி ஏஐ தளத்தை நம்பகத்தன்மையற்றது என்று கூறுவது சரியான தற்காப்பு அல்ல” என்று கூறி கூகுளின் மன்னிப்பு கோரலை அமைச்சர் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பயனர்களுக்கு பதில்களையும், தீர்வுகளையும் வழங்கும் போது ஏஐ இயங்குதளங்கள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது. குறிப்பாக பயனர்களுக்கு தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்கும் அபாயம் இருந்தால் நிச்சயம் அவைகள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தி உள்ளார்.

முறையான பாதுகாப்புகள் அல்லது வெளிப்பாடுகள் இல்லாமல் இந்தியாவை ஒரு சோதனைக் களமாக ஏஐ இயங்குதளங்கள் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும் அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார். மோடி பற்றி ஜெமினி ஏஐ சொன்ன பதிலால், ஏஐ இயங்குதளங்கள் செயல்பட அனுமதி தேவை என்று இந்திய அரசாங்கம் அறிவித்ததுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில் கூகுள் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி 4-ஐ ஓரங்கட்டும் நோக்கத்தின்கீழ், ஆந்த்ரோபிக் (Anthropic) என்கிற ஒரு ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமானது கிளாட் 3 (Claude 3) என்று ஏஐ சாட்பாட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் ஹைக்கூ (Haiku), சோனட் (Sonnet) மற்றும் ஓபஸ் (Opus) என்கிற மூன்று மாறுபாடுகள் அணுக கிடைக்கும்.

அதாவது கூகுள் ஜெமினி ஏஐ ஆனது எப்படி, அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என்கிற 3 வெர்ஷன்களில் கிடைக்கிறதோ.. எப்படி வெவ்வேறு வகையான பணிகளுக்காக பயன்படுத்தபடுகிறதோ. அதேபோல தான் கிளாட் 3-ன் ஹைக்கூ, சோனட் மற்றும் ஓபஸ் செயல்படும்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கூற்றுப்படி, கிளாட் 3 ஆனது ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டை விடவும் சிறப்பாக செயல்படுகிறது. பன்முகத்தன்மை (Multimodality), மேம்படுத்தப்பட்ட துல்லியம் (Improved accuracy), மேம்பட்ட சூழல் புரிதல் (Enhanced context understanding) மற்றும் வேகமான ரெஸ்பான்ஸ் டைம்ஸ் (Faster response times) என கிளாட் 3-ன் மூன்று மாறுபாடுகளும் பல பரிமாணங்களில் விதிவிலக்கான செயல்திறனை வழங்குவதாக ஆந்த்ரோபிக் நிறுவனம் கூறுகிறது.

Related Post

2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பாக்ஸ்- கின்னஸ் சாதனை

Posted by - July 8, 2023 0
அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது, இந்த அற்புதமான சாக்லேட்…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

Posted by - November 28, 2024 0
 இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - August 8, 2023 0
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.…

சந்தையை திறந்து விடுங்க.. சீனாகிட்ட இருந்து பிரிக்கணும் – இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஸ்கெட்ச்

Posted by - September 12, 2025 0
அமெரிக்க எண்ணெய் பொருட்களுக்காக இந்திய சந்தையை திறக்க வேண்டும் என, புதிய தூதரக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் வலியுறுத்தியுள்ளார். India Us Trade: மோடியும் ட்ரம்பும் ஆழ்ந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *