கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரசில் ஆச்சரியம்!

203 0

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரில் அப்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. அவரது தலைமையில் திமுகவுடன் இருந்துகொண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில், அவர் விரைவில் தலைமை பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே அடிபட்டு வந்தது. மேலும், தலைவர் பதவிக்கு கரூர் எம்பி ஜோதிமணி, எம்பி கார்த்தி சிதம்பரம், எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கு.செல்வப்பெருந்தகை கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவாகவும், கட்சியில் சட்டசபை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து 40 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த கட்சியின் சட்டசபை தலைவர் பதவிக்கு ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related Post

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

Posted by - June 1, 2023 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக…

விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

Posted by - September 15, 2025 0
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்

Posted by - March 8, 2025 0
மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை…

“சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு” முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்

Posted by - June 26, 2025 0
தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா? என…

“86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்

Posted by - August 9, 2025 0
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *