கார்த்திகை தீபம்- திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ் …

332 0

Tiruvannamalai Karthigai Deepam, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்  திருவிழா 2021 பக்தர்களுக்கு அறிவிப்பு - tiruvannamalai arulmigu  arunchalaeswarar temple karthigai deepam notification ...டிச.6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபத்தை காண வருவார்கள். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக கார்த்திகை தீபம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 7-ந்தேதி பவுர்ணமியாகும். 2 சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, செஞ்சி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்கள் டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?

Posted by - October 16, 2023 0
பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது. ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அதிமுக ட்வீட்

Posted by - December 28, 2022 0
அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என…
8f44fed2 ef8e 477f 83ff 843d060487c3

Tn President Rule : தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியா.? பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக- நடப்பது என்ன.?

Posted by - May 7, 2026 0
Tn President Rule : நாளைய தினம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நாளாக உள்ளது. அது முடியாத பட்சத்தில் அடுத்ததாக திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர்…

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Posted by - April 22, 2025 0
மின்வாரிய ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *