குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

210 0

திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர் வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய , நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடவாசல் பேருந்துநிலையம் முன்பு, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் இனியன் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்திருந்தனர். நேற்று அதிகாலை கொடிகம்பம் பிடுங்கப்பட்டு காணாமல் போனது. இதனை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அகற்றியதாக தெரிவித்திருந்தனர்.

 

image 717

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் குடவாசல் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

image 718

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திருச்சியில் மாநாடு நிறைவடைந்த உடன் வரும் 31. 1 .2024 அன்று குடவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்டி. இடிமுரசு, நன்னிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மயிலையன், மாநில துணைச்செயலாளர் திருமாறன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதாஇனியன் மற்றும் நிர்வாகிகள் ஆ.தமிழ், உ.அமுதவளவன், கோவி.கணேசன் பால்கிட்டு, உலகநாதன், அப்புவினோத், செல்லூர்அறவாணன், சுடர்வளவன், சரவணன், மஞ்சக்குடி செந்தில் , நேருநகர் ராஜா, மாரியப்பன், இபி .செல்வராஜ் , ஆசிரியர் செல்வராஜ் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

Related Post

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

Posted by - December 14, 2023 0
சென்னை: சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…
Generated Image February 05 2026 12 17PM

காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா?

Posted by - February 5, 2026 0
சென்னையில் காகங்கள் உயிரிழந்ததற்கு பறவைக்காய்ச்சலே காரணம் என்று ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சென்னையில் கடந்த மாதம் 5ம் தேதி…

அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு

Posted by - July 1, 2025 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *