சன் டிவி சீரியலுக்கு முன் தோற்றுப் போய் நிற்கும் விஜய் டிவி..

200 0

மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் மக்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் விஜய் டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை கொண்டு வந்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறும் ஜீ தமிழ்

மற்ற சீரியல்கள் எல்லாம் கதைகள் நல்லாயிருந்தாலும், அதில் அரைச்ச மாவே அரைத்துக் கொண்டு இழுவையாக இழுத்தடிப்பதால் மக்கள் ரொம்பவே போர் அடிக்குது என்று அந்த நாடகத்தை வெறுத்துப் போய் விட்டார்கள். இதற்கு இடையில் கிடைத்த கேப்பில் புகுந்து ஸ்கோர் பண்ணி விட வேண்டும் என்று சைடு கேப்பில் நுழைந்த ஜீ தமிழ் சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் சண்முகத்தின் நடிப்பு பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு டபுள் கேரக்டரை உள்ளே கொண்டு வந்து யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை மிரட்டி விட்டது அண்ணாசீரியல். இதில் சண்முகத்துடன் பரணி சேர்ந்து சவுந்தர பாண்டியனுக்கு வைத்த ஆப்பு பார்ப்பதற்கே கண்கொள்ளக் காட்சியாக அமைந்து மக்களின் பேவரட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது. அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 5.17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது.இதனை அடுத்து கார்த்திக்கு ரொமான்ஸ் வருமா, தீபா மீது காதல் வந்துவிடுமா என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக தீபாவை கூப்பிட்டு தன் காதலை சொல்லி தீபா ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தையும் செய்து கொண்டு ரம்யாக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் வகையில் கார்த்திக் தரமான சம்பவத்தை செய்து விட்டார். அந்த வகையில் கார்த்திகை தீபம் இந்த வாரம் 4.73 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

அடுத்ததாக தன் அம்மாவுக்கு அடுத்து தன் மீது அக்கறையும் பாசத்தையும் காட்டும் வீரா தன்னுடைய மனைவியாக வரவேண்டும் என்ற ஆசைப்படும் மாறன் அப்பாக்கு கொடுத்த வாக்கையும் மீறி யாரும் எதிர்பார்க்காத விதமாக வீரா கழுத்தில் தாலி கெட்டி விட்டார்.ஆனாலும் மாறனுடன் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக கண்மணி, வீராவை தன்னுடன் வீட்டிற்கு கூட்டிட்டு போய் விட்டார். வீராவை தேடி வந்த மாறனை போலீஸ் வந்து கைது பண்ணிட்டு போகிறார்கள். இதில் மாறனை காப்பாற்றும் விதமாக வீரா எடுக்கப் போகும் முடிவு தான் அடுத்த கட்ட விறுவிறுப்பாக கதை இருக்கும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 4.60 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதனை அடுத்து சீனு சொந்தமாக சம்பாதித்து அனைவரது முன்னாடியும் கவுரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாயா, சீனு அப்பா வியாபாரம் செய்து தோற்றுப்போன துணிக்கடையை சீனுவை எடுத்து நடத்த சொல்லி ஐடியா கொடுத்து பணம் உதவியும் செய்கிறார். ஆனாலும் இவர்கள் ஒன்று சேர கூடாது என்று சீனுவின் அம்மா யோசிக்கிறார். இதற்கிடையில் ரகுராம் எடுக்கப் போகும் முடிவு மாயாவுக்கு சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 4.39 புள்ளிகளை பெற்று சந்தியாராகம் சீரியல் நான்காவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக சுடர் எழில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக எழிலின் மூத்த மனைவி சுடர் வெளிநாட்டுக்கு போக விடாமல் தடுப்பதற்காக சுடர்க்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார். அந்த வகையில் எழிலை காப்பாற்றும் விதமாக சுடர் விபத்துக்கு ஆளாகி விடுகிறார். இதனால் சுடரை பக்கத்திலிருந்து கவனிக்கும் பொறுப்பில் எழில் இருப்பதால் இவர்களுடைய பந்தம் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 3.32 புள்ளிகளை பெற்று நினைத்தேன் வந்தாய் சீரியல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் தற்போது புதிதாக நுழைந்திருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே, நினைத்தாலே இனிக்கும் சீரியல்க்கும் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Related Post

உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப ‘இந்த’ ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்..எல்லா பிரச்சனையும் தீருமாம்!

Posted by - November 28, 2023 0
அடர்ந்த காடு போன்ற அடர்த்தியான முடியையும், பனை மரம்போல நீளமான முடியையும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி…

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

Posted by - March 2, 2024 0
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப்…

சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டை வந்த ஆனந்தி.. கோகிலா திருமணத்தில் அவிழ இருக்கும் மர்ம முடிச்சுகள்!

Posted by - June 27, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மர்மத்திற்கும் எப்போது விடை…

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

Posted by - August 9, 2023 0
சன் டிவி சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *