பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

189 0

நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பங்கில் இருந்து மற்றொரு பங்கிற்கு விலையும் மாறுபடுகிறது. இருப்பினும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பெட்ரோலில் தண்ணீர் கலந்த விவகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு எப்போதும் போல நேற்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். ஆனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி விட்டு பங்கிலிருந்து சிறுது தூரம் சென்றவுடன் வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். இன்று இரு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே பார்க்க முடியாது. நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ, அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ நாம் பெரிதும் நம்பி இருப்பது இருச்சக்கர வாகனம் தான். ஆண்கள் பெண்கள் என அனைவருமே இதனை பயன்படுத்துகின்றனர். வாகன இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது பெட்ரோல் தான். ஒரு பக்கம் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது என்றால் மறுபக்கம் பெட்ரோல் கலப்படம் பற்றிய கவலை மக்களுக்கு இருக்கிறது.நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பங்கில் இருந்து மற்றொரு பங்கிற்கு விலையும் மாறுபடுகிறது. இருப்பினும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டுள்ளனர். பெட்ரோல் போட்டு விட்டு பங்கில் இருந்து சிறுது தூரம் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. இது ஒருவருக்கு மட்டுமல்ல அந்த் வழியாக சென்ற பலர் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர். அப்போது விசாரித்து பார்த்ததில் எல்லோரும் ஒரே பங்கில் பெட்ரோல் போட்டது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பும் படி கேட்டுள்ளனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் நடந்ததற்கு விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த யாரும் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை பங்கில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கிடையில் இது தொடர்பாக தலவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்

Related Post

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

Posted by - March 10, 2025 0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த…

அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

Posted by - December 6, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…
image 4

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - January 13, 2026 0
அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது. சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *