சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை

233 0

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் 10 மாத கைக்குழந்தை பாத்திமா ஆகியோர் உள்ளனர். இவர்களது உறவினரான நத்தம் அம்மா பட்டியைச் சேர்ந்த புரோஸ்கான் குழந்தைகளான முகமது சுகைல் (11), முகமது சுனைல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது நல்லதல்ல... ஏன் தெரியுமா..?

தற்போது விடுமுறை என்பதால் அவர்கள் இருவரும் ஷேக் அப்துல்லா வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த 4 குழந்தைகளும் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாலை சோதனை செய்துள்ளார். அப்போது சர்க்கரைக்கு பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்து கொடுத்தது தெரிய வந்தது.

கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது. இதற்காக கற்கண்டு போன்ற வடிவம் கொண்ட மெக்னீசியம் சல்பேட்டை சமையல் அறையில் சேக் அப்துல்லா வைத்துள்ளார். அதனை கவனிக்காமல் பாலில் கலந்து கொடுத்ததால் குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. 4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Post

”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

Posted by - September 18, 2023 0
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Posted by - March 20, 2023 0
தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி…

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - February 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *