‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

184 0

”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி திமுக தலைமை ஆலோசனை”

விழுப்புரம் மாவட்டம் என்றாலே ‘பொன்முடி’ என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், அந்த பெயரை தன் வாயாலேயே கெடுத்துக்கொண்டிருக்கிறார் பொன்முடி. அதனால், அவரது கட்சி பதவியான துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பறித்தார். பின்னர், அவரது அமைச்சர் பொறுப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், தான் கட்டி ஆண்ட விழுப்புரம் மாவட்டத்தில் தன் புகைப்படம் கூட கட்சி பேனர்களில் இடம் பெறாத போன நிலை இருந்தாலும், தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடி, தன் பதவியை பறித்த கட்சி தலைமையையும் இதற்கு காரணமானவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருவதாக பரபரப்பு தகவல் அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறது.

திமுக தலைமை, அதிகாரிகளை அவதூறு பேசும் பொன்முடி?

கட்சி பொறுப்பும், அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்ட பொன்முடி, அதனை தாங்கிக் கொள்ள முடியாமலும் தன்னுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தார். குறிப்பாக, கட்சி பதவி பறிப்புக்கு பிறகு முதல்வரை சந்திக்க சென்னை கிளம்பிய பொன்முடிக்கு பாசிட்டிவாக எந்த பதிலும் முதல்வர் தரப்பிலிருந்து வரவில்லை. அதற்கு காரணம், பொன்முடிக்கு எதிராக திமுகவின் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரும் முதல்வரின் தங்கையுமான கனிமொழியே பகிரங்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்ததுதான். அதுமட்டுமில்லாமல், முதல்வரிடம் பல மகளிர் பொன்முடியின் பேச்சு குறித்து மன வேதனையுடன் பேசிய காரணமும் சேர்ந்து பொன்முடிக்கு எதிரான கடுமையான கோபத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. அதன் காரணமாக, கட்சி பொறுப்பு பறிப்புக்கு பின்னர் அவரது அமைச்சர் பதவியும் தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்பட்டது.

இதனால் கோபமான பொன்முடி, சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்கும்போதெல்லாம், விழுப்புரத்தில் என்னால்தான் கட்சி வளர்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தான் விசுவாசமாக இருந்ததற்கு இப்போது பரிசு கிடைத்திருக்கிறது என்றும் பேசியிருப்பதாக அவருடைய தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பதவி பறிப்பிற்கு கோட்டையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கிய அதிகாரிகள் தனக்கு எதிராக முதல்வரிடம் பேசியதே காரணம் என்றும் அவர் பொங்கித் தள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, விழுப்புரத்தில் யாருக்கு புதிய பதவி கொடுத்தாலும் தன்னால் மட்டுமே திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க முடியும். லட்சுமணன் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றியும் உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டெட்டில் முதல்வர், அடுத்த ஆக்‌ஷன் இதுதான் ?

பதவியை பறித்தும் வாய் துடுக்காக தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை சில நாட்களுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே அவர் அமைதியாக இருப்பார் என்று முதல்வருக்கு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இல்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் லட்சுமணன் உள்ளிட்டவர்களின் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை பொன்முடியின் ஆதரவாளர்கள் செய்வார்கள் என்பதால், அது தேர்தல் பணிகளை பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைமையும் ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post

அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

Posted by - December 6, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த…
Generated Image February 04 2026 5 24PM

நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே – அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை

Posted by - February 4, 2026 0
அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில்…

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்

Posted by - September 25, 2023 0
ஈரோடு: தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை…

மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

Posted by - January 8, 2024 0
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *