செய்தியாளரிடம் கூகுள் பண்ணச் சொன்ன பும்ரா- பதில் அளித்த சுந்தர் பிச்சை

208 0
  • மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.
  • செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்படி இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, “நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி அறிந்து கொள்ள நீங்கள் கூகுளை பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள்,” என்று பதில் அளித்தார்.

கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா,” என்று குறிப்பிட்டுள்ளார்.7253130

சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், “அருமை” என்று பதில் அளித்து இருந்தார். இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Related Post

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

Posted by - December 10, 2022 0
ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *