Generated Image February 09 2026 9 54AM

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

71 0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது என டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

தினந்தோறும் மது விற்பனையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் சுமார் 4000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலங்களில் மது விற்பனை நாளொன்றுக்கு 150 முதல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே வார நாட்களில் மது விற்பனையானது 100 கோடியை எட்டுகிறது. எனவே மது விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதன் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசுக்கு உதவியாக உள்ளது.

மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10ரூபாய்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமானது தொடங்கபட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதலில் மலைப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வைக்க இட வசதி உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சிறிய இடத்திலையே மதுபான கடைகள் உள்ளது. எனவே மதுபான பாட்டில்களை எப்படி பாதுகாப்பாக வைக்க முடியும் எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் பல கடைகள் கடந்த வாரம் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய சலுகைக்கள் வழங்க வேண்டும்,  தொகுப்பூதியம் முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக போராட்டடக்குழுவினர் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.

Related Post

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி

Posted by - November 26, 2022 0
மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான…

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

Posted by - December 8, 2023 0
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *