தமிழகத்தை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

434 0

இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி

பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்   மா.சுப்பிரமணியன், “காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து இதய நிபுணர்களின் ஆய்வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைமை செயலக பணியாளர்களுக்கு 17ஆம் தேதி முழு உடல் பரிசோதனை நடைபெறும் என்றார். இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Post

நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

Posted by - August 27, 2024 0
யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தெடார்ந்து சினிமாவில்…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - February 21, 2023 0
திருப்போரூர்: சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில்…

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Posted by - August 14, 2023 0
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *