தமிழக முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்… மதுரையில் திடீர் பரபரப்பு

245 0

கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரைக்கு சென்றார். இந்த நிலையில் முதல்வரின் தனிப்பட்ட ஓய்வு பயணம் என்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து, முதல்வர் மதுரை விமான நிலையம் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து  அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.கஞ்சாவுடன் முதலமைச்சரிடம் மனு அளிக்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த மனுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் வயது பேதமின்றி பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை போதை பழக்க வழக்கத்தில் இருந்து காத்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல முற்பட்ட முதல்வரை கஞ்சாவுடன் சந்திக்க வந்த நபரால் மதுரை விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்பட்டது.

Related Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023 0
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள்…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?: அதிகாரி விளக்கம்

Posted by - September 21, 2023 0
கோவை: நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…

போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

Posted by - March 9, 2024 0
நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஊர்வசி…

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

Posted by - December 31, 2024 0
தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ் இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *