நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

260 0

தர்மபுரி:

தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.

திருப்புவனம் சந்தை:

குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம்.. இந்த திருப்புவனம் மார்க்கெட்டில்தான், வாரம்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும், பிறகு காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். கால்நடை சந்தையில் ஆடு, கோழி, தவிர, சேவல், வாத்து போன்றவைகளும் விற்பனை செய்யப்படும்.. இதற்கு காரணம், திருப்புவனத்தைச் சுற்றிலும் பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழிகளை விவசாயிகள் வளர்த்து, இங்குவந்துதான் விற்பனை செய்கிறார்கள்.. எப்போதுமே 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும்.. ஆனால், புரட்டாசி புரட்டாசி தொடங்கிவிட்டதால், ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லையாம்.

ஆட்டுக்கறி:

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது, வெறும் ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக கவலையுடன் கூறுகிறார்கள். நாட்டுக்கோழி விலையும், கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இப்போது, ரூ.450ஆக உயர்ந்துவிட்டதாம். 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும், இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருத்தம்:

இதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.. இங்குள்ள நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.. இதற்காகவே வியாபாரிகள், கால்நடைகளை கொண்டுவந்து இங்கு விற்றுவிட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.. இதற்காகவே, ஆட்டுச்சந்தை பிரத்யேகமாக நடைபெற்றும் வருகின்றது.. தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக இன்று வந்திருந்தனர்.

விற்பனை:

ஆனால், காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச்சந்தையில் சிறிய அளவில ஆடுகள் 2, 500 ரூபாயில் துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 16,000 ரூபாயில் வரை மட்டுமே விற்பனையானதாம்.. இந்த புரட்டாசி முடியும்வரை இப்படித்தான் மந்த நிலையில் விற்பனையாகும் என்கிறார்கள்.

Related Post

உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா…. அப்போ நீங்க செலக்ட்

Posted by - September 13, 2023 0
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

“நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க” மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்

Posted by - December 31, 2024 0
நடிகர் சூரியின் அம்மன் உணவகம் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள…

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - April 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – சாதித்தது என்ன?

Posted by - May 6, 2023 0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று செய்து,  மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? 2021 சட்டமன்றத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *