நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்

189 0

இஸ்ரேலுடன் தற்போது வரை எந்தவித போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

”போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லை”

அமெரிக்காவின் முயற்சியால் ஈரான் – இஸ்ரேல் இடையேயான 12 நாள் மோதல் முடிவுக்கு வருவதாகவும், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்த, போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என ஈரன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுமா? அல்லது தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் சொல்வது என்ன?

ஈரான் வெளியிறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளபடி: இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை நடத்தியது. இப்போதைக்கு, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த “உடன்பாடும் ” ஏற்படவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய ராணூவம் ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால், அதுவரை எங்கள் ராணுவம் தீவிரமாக பதிலடி அளிக்கும்” என விளக்கமளித்துள்ளார். இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் சொல்வது என்ன?

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பாக கருத்து சொல்ல இஸ்ரேல் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அல்லது அவரது அலுவலகம் சார்பிலும் கூட எந்தவித கருத்தும் பகிரப்படவில்லை. ஈரானின் மறுப்பும், இஸ்ரேலின் அமைதியும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதா? என்பதை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட நாடுகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Related Post

qq

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Posted by - March 24, 2026 0
அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்…

உலக நாடுகளை தெறிக்கவிட்ட ஈரான்; 4000 கிமீ பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை; அலறும் அமெரிக்கா,பிரிட்டன்

Posted by - March 21, 2026 0
மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

Posted by - October 24, 2023 0
பீஜிங்: அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி…

சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா – உறவு எப்படி?

Posted by - May 15, 2025 0
எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன், இந்தியாவின் உறவு எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்தியாவும்.. அண்டை நாடுகளும்.. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *