“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

250 0

கோவை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.

முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் 25-வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன.

இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை இல்லாதது போலவும் அவர்கள் காண்பிக்கின்றனர்.

திமுக – அதிமுக எப்போதும் ஒன்றுசேராது. அதேபோல, காங்கிரஸ்-பாஜக ஒன்று சேராது. எனவே,இதுகுறித்து எதற்கு பேச வேண்டும்? ஆனால், இதுபோல பேசவைப்பதற்காக சிலர் முயற்சிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளாக நான் ரத்த தானம் செய்து வருகிறேன். என்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர் தங்கமணி பற்றியும் சமூக வலைதளங்களில் பொய் தகவல் பரப்புகின்றனர்.

அதிமுக எங்களின் தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்குத்தான் வருவார்கள். யாரும் வெளியே போக மாட்டார்கள். சுமார் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, உலக அளவில் 7-ம் இடத்தில் உள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களை எம்எல்ஏவாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இப்படி இருக்கையில், வெறும் 3, 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாங்கள் ஏன் சேரப் போகிறோம்? இதுபோன்ற வதந்திக்கெல்லாம் பதில் கூற வேண்டுமா? அதிமுக 35 முதல்40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சியாகும்.

எனவே, அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் இதற்கெல்லாம்பதில் சொல்ல வேண்டாம். இவ்வாறு எஸ்.பி. வேலுமணி பேசினார். அப்போது, எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Post

s 2

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - February 19, 2024 0
சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு…
Generated Image January 16 2026 5 04PM

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

இந்தி சர்ச்சை | “சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் உங்கள் மகளிடம் கேளுங்கள்” – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

Posted by - April 4, 2026 0
“சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத்…

“தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள்“ – அமித்ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பாஜக மட்டும் தான் தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *