மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

172 0

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில்விஜய்யைப் பார்ப்பதற்காக வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இன்று சந்திப்பு:

இந்த சம்பவத்திற்கு பிறகு பாதிக்க்ப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காதது மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சிறப்பு பேருந்துகள் மூலமாக கரூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு தவெக சார்பில் அழைத்து வந்தனர்.

மன்னிப்பு கேட்டு அழுத விஜய்:

மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் உயிரிழந்தவர்களின் 41 பேர் குடும்பத்தினரையும் நடிகர் விஜய் தனித்தனியே சந்தித்தார். அவர்களது குடும்பத்தினரிடம் கரூரில் நேரில் வந்து உங்களைச் சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் கரூருக்கு மீண்டும் வந்து நேரில் சந்திப்பதாகவும் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த குடும்பங்களிடம் விஜய் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக வரலாற்றில் கருப்பு நாள்:

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு தனது அரசியல் பயணத்தை விறுப்பாக்கிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். திருச்சியில் தொடங்கிய அவரது பரப்புரை அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல்லில் சிறப்பாக நடக்க கரூர் தவெக-விற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.

தவெக அரசியல் வரலாற்றில் சோகத்திற்குரிய நாளாக மாறிய அந்த பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த பிறகு, தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடுகள் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினாலும் விஜய் நேரில் வரவில்லை என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.

உத்தரவாதம் அளித்த விஜய்:

இந்த சூழலில், விஜய் பாதிக்கப்பட்ட மக்களை தன்னைப் பார்க்க அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்காமல், தன்னைப் பார்க்க அழைத்து வரலாமா? என்று அனைத்து தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், தனது தரப்பு நியாயத்தை ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியே நேரில் சந்தித்து விஜய் விளக்கம் அளித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளார்.

விஜய் தற்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவிட்டதால் மீண்டும் அவர் தனது பரப்புரையை விரைவில் தொடங்குவார் என்று கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருப்பதால் விஜய் இனி வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் தனது அரசியல் பணிகளைத் தொடங்குவார் என்று கருதப்படுகிறது.

Related Post

Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…
s 2

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

Posted by - April 21, 2026 0
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள…
qwertyujkl

ரஜினியை திமுக மிரட்டியது இப்படித்தான்..

Posted by - March 18, 2026 0
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என சொன்ன உடனேயே கிட்டதட்ட 18 சதவிகித ஓட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்து விட்டது…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *