முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

216 0

நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில் உயரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதன் பிறகு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிட்டதட்ட பங்கின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்தது.

நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில் உயரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதன் பிறகு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிட்டதட்ட பங்கின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்தது.

அதாவது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை என் எஸ் இ சந்தையில் ரூ.91.20 என்ற நிலையை அடைந்தது. அதாவது பங்கின் ஐபிஓ விலை ரூ.76 ஆக இருந்தது.

ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவடைந்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓவில் ரூ. 6,146 கோடி முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதாவது 4.26 முறை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டது. அதாவது நிறுவனத்தின் எதிர்பார்ப்பை விட மிக குறைந்த அளவிலேயே விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஐபிஓவில் ஆங்கர் முதலீட்டாளர்களில் நோமுரா, ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை முதலீடு செய்திருந்தன.

ஓலா நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் ஈட்டி வருவதால் அதன் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் மிகப்பெரிய கவலையாக இருந்தது.

மேலும் தகுதி வாய்ந்த தனியார் நிறுவன முதலீடு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதலீட்டாளர்கள் இதில் பெரிய அளவில் ஆர்வம் செலுத்தவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் இன்னும் குறைவான விலையில் பங்கை வாங்கலாம் என காத்திருந்தனர். மேலும் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்த முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்திருந்தனர். இதில் லாபம் ஈட்ட குறைந்தபட்சம் 2,3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தைக்கான நிறுவனத்தின் லட்சியமாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி செயல்திறன், தொடர் நஷ்டம், அதிக போட்டி ஆகியவை பெரும் சிக்கலாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஓவில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒரளவு லாபம் கிடைத்ததும், இதிலிருந்து வெளியேறலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ஸ்டாப் லாஸ் ரூ.70க்கு குறைவாக வைத்து தங்களின் முதலீட்டை மேற்கொள்ளலாம் என ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட்டின் வெல்த் தலைவர் ஷிவானி நியாதி பரிந்துரை செய்துள்ளார்.ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் 2024 நிதியாண்டில் ரூ. 5,009.8 கோடியாக அதிகரித்தது, 2023 நிதியாண்டில் ரூ. 2,630.9 கோடியாக இருந்தது. இந்த வளர்ச்சியானது Ola S1 மற்றும் Ola S1 ப்ரோ ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் Ola S1 டெலிவரி தொடங்கப்பட்டது முக்கிய காரணங்கள் ஆகும். மேலும் இந்த ஆண்டில் Ola S1 X+ மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Related Post

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! “கொரோனா” முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

Posted by - September 30, 2023 0
டெல்லி: இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத்…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி : புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில…

கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

Posted by - November 29, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *