ரூ.1.25 லட்சம் வரை அரசு கடன்… குறைந்த வட்டியில் – எப்படி வாங்குவது? யார் யாருக்கு கிடைக்கும்?

214 0

ஆண், பெண் இருவருக்கும் ரூ.1.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனை கடனை பெற விண்ணப்பிப்பது எப்படி, விதிமுறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

சுய உதவிக்குழு மூலம் பல்வேறு திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த குழுக்கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. மகளிரின் வளர்ச்சிக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அதேபோல், அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், பெண்கள் தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற பல ஆண்டுகளாக சுய உதவிக்குழுக்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் தொழில்களை விரிவுப்படுத்தவும், புதிதாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் சார்பில் கடன் பெறும் திட்டமும் உள்ளது.  அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடனாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் திட்டம் உள்ளது.  இந்த சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 கடன் வழங்கப்படும்.  மேலும் இந்த குழு தொடங்க சில விதிமுறைகளும் உள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இந்த திட்டம் குறித்து விண்ணப்பிக்கலாம். மேலும் TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

Related Post

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - December 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *