12 வயது சிறுமிக்கு வாலிபருடன் திருமணம்- முதலிரவு அறையில் இருந்து மீட்ட அதிகாரிகள்

343 0

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.12 வயது சிறுமிக்கு வாலிபருடன் திருமணம்- முதலிரவு அறையில் இருந்து மீட்ட  அதிகாரிகள் | 12 year old girl married to boy officials rescued

சிறுமியின் முகவரி மற்றும் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த பெரியசாமி-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் மாரிமுத்து (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது. அதிகாரிகள் விசாரித்தபோது மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு அறைக்கு சென்று விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி கூறினர்.

இதையடுத்து உறவினர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். மேலும் அதிகாரிகள் விசாரித்தபோது மாரிமுத்து, சிறுமியின் சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும், இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்தது. அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்தில் சேர்த்தனர்.

12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் வாலிபரின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Post

புதுவையில் 2 நாளில் ரூ.30 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர். இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து…
Generated Image November 22 2025 5 51PM

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய் பேச்சு.. முழு விவரம் இதோ!

Posted by - January 20, 2025 0
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக…
court

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted by - December 5, 2023 0
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி…

நீண்ட உறக்கத்திலிருந்து முதல்வர் எப்போது விழிப்பார்..? – அண்ணாமலை விமர்சனம்..!!

Posted by - May 25, 2024 0
நீண்ட உறக்கத்திலிருந்து தமிழக முதல்வர் எப்போது விழிப்பார் ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *