2 தொகுதிகளில் உங்களுடைய பெயர் இருந்தால் எங்கு வாக்களிக்க வேண்டும் தெரியுமா?

250 0

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களும். அதற்காக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தையும் காணலாம்.

கேள்வி: பூத் ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?

பதில்: நிச்சயம் வாக்களிக்கலாம். உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம், பூத் ஸ்லிப் இல்லாமல் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்கள் எவை?

பதில்:

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

கேள்வி: வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்ல முடியுமா?

பதில்: வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, வாக்கு பதிவு செய்வதை படம் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்

கேள்வி: வாக்குச்சாவடி மையத்திற்கு வாகனங்களில் செல்ல முடியுமா?

பதில்: வாக்குச்சாவடிக்கு வாகனங்களில் செல்லலாம், வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிக்கு உள்ளே வாகனங்கள் அனுமதி இல்லை.

கேள்வி: வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடி மையத்தில் இருக்கும்போது, வாக்களிப்பதற்கான நேரம் கடந்துவிட்டால், வாக்களிக்க முடியுமா?

பதில்: வாக்களிப்பதற்கான நேரத்திற்கு முன்பாக வாக்காளர் வாக்குச்சாவடி மையத்தில் இருந்தால் வாக்களிக்க முடியும். நேரம் கடந்தாலும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

கேள்வி: வாக்காளர் ஒருவரின் பெயர், இரண்டு தொகுதிகளில் அல்லது வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றிருந்தால் அவரால் வாக்களிக்க முடியுமா?

பதில்: இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் ஏதேனும் ஒரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு இடத்தில் மட்டும் தான் வாக்களிக்க முடியும்.

கேள்வி: வாக்காளர் ஒருவர், அண்மையில் வீடு மாறியிருந்தால், பழைய முகவரியில் உள்ள அடையாள அட்டையுடன் அவரால் வாக்களிக்க முடியுமா? எங்கு வாக்கு அளிப்பது, புதிய இடத்திலா, பழைய இடத்திலா.

பதில்: வாக்களிக்கலாம், வாக்காளரின் வாக்காளர் பெயர் பட்டியல் எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் வாக்களிக்கலாம், Voter Help line என்கிற ஆப் மூலம் அவருடைய அடையாள அட்டை எண்ணை வைத்து எந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடைய பெயர் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.

கேள்வி: பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர் தனது வாக்கினை எப்படி செலுத்துவார்? உதவிக்காக யாரை அழைத்துச் செல்லலாம்?

பதில்: வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ப்ரெய்லி எழுத்துக்கள் இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது இருப்பினும் உதவிக்கு ஒருவரை அழைத்து செல்லலாம்.

கேள்வி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படுவதையும், தனது வாக்கு பதிவாகிவிட்டது என்பதையும் ஒரு வாக்காளர் எப்படி அறிய முடியும்?

பதில்: இரண்டு முறைகளில் வாக்காளர் தாங்கள் வாக்குப்பதிவு செய்து விட்டோம் என்பதை அறிந்து கொள்ளலாம், ஒன்று வாக்கை செலுத்தியதற்கு பின் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாரோ அதற்கு அருகாமையில் உள்ள சிவப்பு விளக்கு எரிந்து பீப் சத்தம் வரும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரம் அருகே உள்ள விவிபேட் இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தாரோ அவருடைய சின்னம் பொருந்திய ஒப்புகை சீட்டு வெளியில் வந்து மீண்டும் அதே பெட்டிக்குள் விழும் இதன் மூலம் வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

கேள்வி: வாக்குச்செலுத்திய பின், 7 விநாடிகள் வந்துசெல்லும் ஒப்புகைச் சீட்டில், தான் செலுத்திய வாக்கு வேறு வேட்பாளருக்கு பதிவானதுபோல் வந்தால் என்ன செய்வது? இது குறித்து முறையிடலாமா?

பதில்: ஆமாம் உடனடியாக வாக்காளர் தேர்தல் அலுவலர்களிடம் முறையிடலாம், தேர்தல் அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் ஒரு பட்டனை அழுத்தி அது சரியாக விழுந்துள்ளதா என பார்ப்பார் குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின் அந்த வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். குற்றச்சாட்டு பொய்யாக இருப்பின் அந்த வாக்காளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

கேள்வி: தனது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், அந்த வாக்காளர் என்ன செய்ய வேண்டும்?, வாக்களிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

பதில்: தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தி இருந்தால் அதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட வேண்டும். குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்காளரிடம் ஒரு படிவத்தை கொடுப்பார். அதனை பூர்த்தி செய்த பிறகு, அந்த வாக்காளருக்கு வாக்குப்பதிவு சீட்டு வழங்கப்படும் அதில் தன்னுடைய வாக்கை வாக்காளர் செலுத்தலாம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது

 

கேள்வி: வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர் சந்தேகம் எழுப்பினால், அவர் வாக்களிக்க முடியுமா?

பதில்: வாக்குச் சாவடி முகவர் ஒரு வாக்காளர் தொடர்பாக புகார் அளித்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரில் உண்மை உள்ளதா என்பதை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். முகவரின் குற்றச்சாட்டு உண்மை என்றால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படும் காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். புகார் தவறாக இருந்தால் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

கேள்வி: வாக்குரிமை உள்ள ஒருவர் சொந்த ஊருக்குப் போக முடியாவிட்டால், ஓட்டுப் போட வேறு வழி உள்ளதா?

பதில்: வாக்காளர் அவருடைய அவருடைய பெயர் எந்த வாக்காளர் பட்டியலில் உள்ளதோ அந்த ஊருக்கு நேரில் சென்று தான் வாக்களிக்க முடியும்.

Related Post

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

Posted by - July 1, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு…

சிபில் ஸ்கோர் தேவையே இல்லை..Dont Worry! கடன் பெற சிறந்த வழிகள் இதோ..!!

Posted by - December 11, 2024 0
உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *