20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

204 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

அதன் பேரில் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையிலான போலீசார், தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் நாகரசம்பேட்டை அக்ரஹாரத் தெருவில் உள்ள ரமேஷ் குமார் வீட்டிற்குள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
அப்போது இடதுபுறத்தில் பூட்டப்பட்டிருந்த குடோனை திறக்குமாறு வீட்டில் இருந்த ரமேஷ்குமார் உறவினர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்குள் உரம் மூட்டைகள் இருப்பதாகவும் வேறு எதுவும் இல்லை என திறக்க மறுத்துள்ளனர். அதேபோல் குடோனில் இருந்து உரம் வாசனை அடித்துள்ளது. பின்னர் போலீசார் அரையின் கதவை உடைத்து பார்த்தபோது மூட்டை மூட்டையாக நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வெளி நபர்கள் யாரும் கண்டுபிடித்து கூடது என்பதற்காக .வெடி மூட்டைகளை சுற்றி உரங்களை தூவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பதுக்கி வைத்திருந்த 557 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 204 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 20 லட்சம் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ் குமார், சரவணன், சந்திரசேகர்  மூன்று பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Related Post

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

Posted by - April 11, 2025 0
திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி…

மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Posted by - December 27, 2022 0
கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *