ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

215 0

ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன.

பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி நாட்களில் இருக்கிறோம்.

அந்தவகையில், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடைசி வெள்ளி கிழமையில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்.

சுமங்கலி பூஜை

ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை செய்வது அம்பாளின் மனதை குளிர்விக்கும். இதனால் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம்.சுமங்கலி பூஜைக்கென்றே பிரத்தியேகமாக விருந்து தயார் செய்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.இதை செய்யமுடியவில்லை எனில் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, இரண்டு வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து, தாம்பூலம் கொடுத்து ஆசி பெறலாம்.

வீட்டுக்கு யாரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள், அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து, அம்மனுக்கு புடவை சாற்றலாம்.

குத்து விளக்கு பூஜை

பெரும்பாலான அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியன்று நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறும்.அதில், குத்து விளக்கு பூஜை நடைபெறும் அம்பாள் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

ஆடி வெள்ளி விரதம்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும்.

விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து இனிப்பு நைவேத்யம் செய்ய வேண்டும்.அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.

சொல்லவேண்டிய மந்திரம்

வீடு சுபிட்சமாக, தடைகள், நோய்கள் நீங்க, லலிதா சஹஸ்ரநாமம் மந்திரம் செய்யலாம்.

அனைத்து விதமான தோஷங்களும், கண் திருஷ்டி உள்ளிட்ட எதிர்மறையான ஆற்றல் விலக, அபிராமி அந்தாதி பாடல்களை மந்திரம் செய்யலாம்.

கடன் மற்றும் வறுமை நீங்கி, செல்வம் தழைத்து வளர, கனக தாரா ஸ்தோத்திரத்தை மந்திரம் செய்யலாம்.

 

Related Post

Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - March 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? – பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

Posted by - March 19, 2026 0
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *