30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

357 0

திருவனந்தபுரம்:

துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு வெகுநேரம் ஆகியபடி இருந்தாால், பயணிகள் எதிர்ப்பு தெரவித்தனர். இதையடுத்து அந்த விமானதத்தில் பயணிக்க இருந்த அனைத்து பயணிகளும் அங்கிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.ஏர் இந்தியா பணியாளர்களை கடுமையாக தாக்கிய பயணி: நடுவானில் திரும்பிய விமானம்!  - லங்காசிறி நியூஸ்

இந்நிலையில் அந்த விமானம் திங்கட்கிழமை 2.45 மணிக்கு தான் துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது. சுமார் 30 மணி நேர தாமத்திற்கு பிறகு அந்த விமானம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்தது. இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலர் தாங்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

அந்த பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்ததம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக அந்த பயணிகள் முன்கூட்டியே விமானத்தில் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள. ஆனால் துரதிஷ்டவசமாக துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் திங்கட்கிழமையே புறப்பட்ட காரணத்தால், அவர்கள் திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடந்த தினத்தில் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர்களது நிச்சயதார்த்தம் அன்றைய தினம் நடக்கவில்லை. வேறொரு நல்ல நாளில் அவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த, அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கக்கூடிய ஏர் இந்தியா விமானம் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுவதாகவும், விமானம் தாமதமாகும் பட்சத்தில் அதுபற்றி உடனடியாக பதிலளிப்பதில்லை எனவும், டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்தால் ஒரு வாரத்திற்கு பிறகுதான் பணம் திரும்ப கிடைக்கிறது என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Post

இந்தியாவில் மேலும் 156 பேருக்கு கொரோனா- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக…

இனி பாதி நாளுக்கு பணம் கொடுத்தா போதும்.. 20 Vodafone திட்டங்களில் அதிரடி மாற்றம்.. ஆடிப்போன Jio, Airtel, BSNL!

Posted by - December 9, 2024 0
வோடாபோன் ஐடியா (Vodafone Idea) அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான “ஹீரோ பேக்குகள்” (Hero…

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *