4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி!

129 0

நீலிமா ராணி

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், நடிகை நீலிமா ராணி தனது வாழ்க்கையின் கடினமான நாட்கள் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

4 கோடி ரூபாய் கடன்

 

இதில் “நானும் என் கணவரும் இணைந்து ரூ. 4 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி, அப்படத்தை தயாரித்தோம். ஆனால், அந்த படம் நினைத்தது போல் சரியாக வரவில்லை. இறுதியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். அந்த படத்திற்காக கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம்.

சரி இழந்தாச்சு, ரோட்டுக்கு வந்தாச்சு இனி இங்கிருந்து எப்படி நகர போகிறோம் என நானும் என் கணவரும் யோசித்தோம். அந்த சமயத்தில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க துவங்கினேன். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தேன்.வாடகை வீட்டிற்கு கூட போக முடியாமல், என் கணவரின் நண்பர் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தோம். எங்களுடைய குறிக்கோள் வெற்றிபெற வேண்டும் என்று இருந்தால், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம்.

அதனால்தான், மீண்டும் அந்த இடத்தை எங்களால் பிடிக்க முடிந்தது. 2017ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறைமாறாத பூக்கள் ஆகிய சீரியல்களை தயாரித்தோம். எங்களுடைய குறிக்கோள் சினிமா தயாரிப்பதாக இருந்தாலும் கூட, சீரியலையே முதலில் தயாரித்தோம்.

எனினும், கண்டிப்பாக ஒரு நாள் படம் தயாரிப்போம். எனவே நாம் சோர்ந்து போய் உட்கார்ந்தால் யாரும் நமக்கு கை கொடுக்க வரப்போவது இல்லை. நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவிக்கொள்ள வேண்டும்” என நீலிமா ராணி கூறியுள்ளார்.

Related Post

இந்த பிரச்சனை இருப்பவர்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது : மீறினால் உயிருக்கே ஆபத்தா..?

Posted by - March 6, 2023 0
யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவாகும். இது பியூரின்ஸ் என்னும் கெமிக்கலை உடல் வெளியிடும்போது உருவாகக்கூடிய அமிலமாகும். சிலருக்கு அசைவ உணவுதான் நிறைவைத் தரும்.…

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

Posted by - April 10, 2023 0
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…

“தாமரை” மலர் பானம்…சூரியனால் ஏற்படும் தலைவலியை கட்டுபடுத்துகிறது…

Posted by - April 18, 2024 0
இப்போது தாமரை மலர்களின் பலனைப் பெற இதை பயன்படுத்தும் முறை குறித்து  இங்கு காணலாம்.. தண்ணீர் – 1 கிளாஸ் தாமரை மலர்கள் – 3 செய்முறை:…

உடல் சோர்வைப் போக்கும் மகராசனம்

Posted by - April 19, 2023 0
தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும்…

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

Posted by - May 19, 2023 0
தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *