முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

229 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என வெளிப்படையாகவே அவர் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் இருவரும் இருந்த மேடையில் கூட ஜெயலலிதாவை எதிர்த்து தில்லாக பேசிய நடிகரும் ரஜினி தான். ஆனால் ஜெயலலிதாவை அவர் எதிர்ப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சம்பவம் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தால் காலகட்டம் அது. அப்போது ரஜினி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பயணித்த போது போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏன் என்று விசாரித்த போது முதல்வர் வாகனம் வருகிறது அதனால் காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

ஜெயலலிதாவை எதிர்த்த ரஜினி

எவ்வளவு நேரம் ஆகும் என தலைவர் விசாரித்திருக்கிறார். போலீசார் அரை மணி நேரம் என்று சொன்னதில் அவ்வளவு பெரிய காரா வருகிறது என கேட்டுவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்திருக்கிறார்.

பிறகு காரை விட்டு இறங்கி அருகில் இருந்த பெட்டி கடையில் சிகரெட் வாங்கி இருக்கிறார். அதை தன்னுடைய ஸ்டைலில் பற்றவைத்து மாஸாக அங்கு நின்றாராம். உடனே அவரைப் பார்த்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

இதனால் அந்த இடம் பரபரப்பாக மாறி இருக்கிறது. உடனே பதறிப்போன போலீசார் முதல்வர் வரும் நேரத்தில் இவ்வளவு கூட்டம் இருப்பது நல்லது கிடையாது என ரஜினியை நீங்கள் போகலாம் சார் என பவ்யமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வந்த தேர்தலில் தான் ரஜினி ஜெயலலிதாவை எதிர்த்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இப்படி முதல்வரையே எதிர்த்து தில்லாக சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார் என அப்போதே கொண்டாடப்பட்டார். அதை இப்போது ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Post

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

Posted by - January 26, 2024 0
சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல்…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - August 24, 2023 0
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *