சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

200 0

weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

19.12.2022 மற்றும் 20.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

21.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

22.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

23.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராமநாதபுரம்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

19.12.2022 : அந்தமான் கடல் பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.12.2022 மற்றும் 21.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும்.

22.12.2022:  குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,   மன்னார் வளைகுடா  மற்றும்  அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

மேலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Post

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Posted by - June 18, 2025 0
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன்…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

Posted by - December 11, 2023 0
சென்னை: கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா? சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *