+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து…

192 0

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இதையடுத்து, மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் தொடங்கி, பல்வேறு தலைவர்களும், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வுகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று(03.03.25) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் நிலையில், மாணவர்கள் வினாத்தாளை படிக்க கூடுதலாக 10 நிமிடங்களும், தங்கள் விவரங்களை சரிபார்க்க 5 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. சரிபார்ப்புக்காக, மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டின் நகலை, அடையாளச் சான்றுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நேற்று இரவே தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இரவு நன்றாக உறங்கி, தேர்வுகளை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் அணுகுமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

இதேபோல், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை நேற்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்வுகள் மாணவர்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என கூறி, ஆல் த பெஸ்ட் என வாழ்த்தியுள்ளார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் சிறப்பான முறையில் ஆல் பாஸ் செய்து, அவர்களின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கேள்விகளுக்கான பதில்களை எவ்வித பதட்டமும் இல்லாமல் எழுதுமாறும், படிக்கும் ஆர்வத்துடன் உடல்நலனிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வுகளை எழுதுமாறு கூறியுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தம்பி, தங்கைகள் தேர்வுகளை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வெற்றி பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

 

 

 

Related Post

“ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” – துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சூசகம்?

Posted by - September 24, 2024 0
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *