“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

118 0

கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் பலரும் விலகி வந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய பேச்சாளரான காளியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். இது நாம் தமிழருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

எங்களுக்காக யாரும் இல்ல:

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு காளியம்மாள் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டி அளித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது, தமிழர்கள் கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கிப் பார்க்கிறார்கள். எங்களுக்கான பெரிய பங்களிப்பு கிடையாது. ராஜ்யசபாவில் எங்களுக்காக பேசுறதுக்கு ஆளு கிடையாது. மக்களவையில் எங்களோட குறைகளைப் பேசுறதுக்கு யாரும் கிடையாது.

ஒரு சட்டத்தைத் திருத்துறாங்கனா கடலோர முறைப்படுத்துதல் சட்டம், நீர்கொள்கை, மீன்பிடி கொள்கையா இருக்கட்டும் யாரை கேட்டு அந்த கொள்கையை உருவாக்கியிருக்கீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசு. அதற்கு யாருடன் விவாதிக்கப்பட்டது. எந்த மக்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது?

யாரை கேட்டு திருத்துனீங்க?

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் திருத்தம் செய்றாங்க. அது யாரை கேட்டா திருத்துனீங்க? மீன்பிடிக்கப் போறது நாங்க. கேரளாவுல இருக்குற மீனவர்கள் கடலுக்கு பட்டா கேட்குறாங்க. எங்களுக்கே பட்டா இல்லாமல் நாங்க தவிக்குறோம். நாங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகளாக கூட நடத்தப்படவில்லை. ஏதிலிகள் போல நடத்தப்படுகிறோம். எங்களுக்கான எந்த உரிமையும் கிடையாது, சலுகையும் கிடையாது. மீன்வளத்துறை அமைச்சர்னு ஒரு பதவி. அதுவும் எங்களுக்கு இல்லை. எங்களோட பிரச்சினையை யார் இப்போது பேசப்போகிறார்கள்?

கடல்குடி மக்களா பிறந்தது குத்தமா?

ஒரு தாயை இழந்த பிள்ளையப் போல நாங்கள் இருக்கிறோம். இதுதான் யதார்த்தமான உண்மை. எங்களுக்கான உரிமையை கூட பெற முடியாத மக்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். என் வீட்டுக்காரர் இலங்கையில் இருந்து வந்த பிறகு 60 நாள் நான் சிகிச்சை கொடுத்தேன். ஒவ்வொரு பெண்களும் என்ன பாவம் செய்தோம்? கடல் குடி மக்களாக பிறந்தது குத்தமா?

கச்சத்தீவு

எங்களோட கச்சத்தீவை கொடுத்துவிட்டு, எங்களோட நிலத்திற்கு நாங்கள் போகும்போது நீங்கள் அத்துமீறி வருகிறீர்கள்? என்கிறார்கள். இந்த எல்லைக் கோட்டை யாரு போட்டீங்க? இந்திய – இலங்கை அரசும் போடுவீங்களா? எங்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவாது எங்களை உட்கார வச்சுருக்கனும்ல? இது யாரால் வரையறுக்கப்பட்டது?

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அவர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. ஆனால், அவர் திமுக-வில் இணைய இருப்பதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலம் தமிழ்நாடு மீன்பிடி சட்டத் திருத்தம், கச்சத்தீவு விவகாரம் என திமுக-விற்கு எதிராக காளியம்மாள் பேசியுள்ளார்.

Related Post

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்.. நீலகிரியில் பரபரப்பு

Posted by - March 25, 2024 0
நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில்…

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

Posted by - July 14, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர்…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *