”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

164 0

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

நிறைவேற்றப்படாத மசோதாக்கள்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  மனுவில், “ 2020 முதல் 2023 வரை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர், 10 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். அவற்றை மறுபரிசீலனை செய்த சட்டமன்றம், மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இரண்டாவது முறை தமது ஒப்புதலுக்கு அனுப்ப்பட்ட மசோதாக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவற்றையும் அவர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்” என குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

ஆளுநரின் நடவடிக்கையில் நேர்மை இல்லை” – உச்சநீதிமன்றம்

வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில், “பொதுவான விதியின்படி  மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம். இரண்டாவது முறையாக நிரைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். அந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதங்களிலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

ஒப்புதல் கிடைத்த மசோதாக்கள்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவற்றிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமன அதிகாரம்:

மேற்கண்டவற்றில் திமுக ஆட்சியில் நிரைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இந்த மசோதாவானது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு அரசுக்கே கிடைக்க வழிவகை செய்கிறது. ஏற்கனவே குஜராத், ஆந்திரா, தெலங்கானாவில் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலோடு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார். அதேபாணியில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை மசோதா வழங்குகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் கொடுத்துள்ளதால், விரைவிலேயே இந்த மசோதா சட்டமாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - August 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *