தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி : விஜய் குற்றச்சாட்டு!

212 0

#actorvijay #tvk #thalapathy #vijay #aiadmk #dmk #bjp #mkstalin #tncm #tntrending #tamilnews #pixeltv #pixelmedia

தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி நடப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தவெக பெண் நிர்வாகிகள் அத்தியாவசிய உதவிகள் வழங்கியபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், தீ விபத்தில் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய குற்றச்செயலா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவுவதையும் காவல்துறை தடுக்கிறதென்றால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என வினவியுள்ள விஜய்,

காவல்துறையினரின் அத்துமீறலைத் தட்டிக்கேட்ட பெண் நிர்வாகிகள் பூட்ஸ் காலால் தாக்கப்பட்டதையும், ஆடைகள் கிழியும் அளவுக்குத் தள்ளி விடப்பட்டதையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த அராஜக செயலில் ஈடுபட்டுத் தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Post

பெண்களுக்கு இலவச கல்வி..20 லட்சம் புதிய வேலை.. பொது சிவில் சட்டம் – குஜாரத்தில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

Posted by - November 26, 2022 0
குஜராத் மாநில தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக பெண்களுக்கு இலவச கல்வி, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்றவற்றை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

Posted by - March 16, 2023 0
 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக…

“சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்” – உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து!

Posted by - December 13, 2022 0
நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பதவியேற்க போகும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை…

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *