2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

137 0

 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும் சேலையும் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, இயற்கைக்கும், சூரியனுக்கும், உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாவாகும். இது தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் ஆகும். இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரித்து, புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக அமைந்துள்ளது. அடுத்ததாக தைப்பொங்கல் நாளில் புது அரிசியில் இனிப்பு பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபடுவர். வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டாடுவார்கள். அடுத்தாக மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலும் கொணாடாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது.கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. எனவே இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிகைக விடுத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு பொங்கல் ரொக்கப்பணம் தொடர்பாக எந்தவித முடிவையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் ரொக்கப்பணம் வழங்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. ஆயிரம் ரூபாயா.? 3 ஆயிரம் ரூபாயா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தேர்தல் தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பச்சரிசி,சக்கரை ஒதுக்கீடு

இந்த நிலையில் பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Post

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

Posted by - January 9, 2026 0
ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி. பணி நிரந்தரம்…

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா !

Posted by - February 28, 2026 0
நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் நடிகர் விஜய் பிரபல…

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *