இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

104 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்​கையை ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி​முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் 4-வது நாளாக சென்னை எழில​கத்​தை​யும், நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகத்​தை​யும் முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர்.

டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆசிரியர்​களை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர். அதேபோல் உழைப்​பாளர் சிலை அருகே கூடிய ஏராள​மான ஆசிரியர்கள், எழில​கம் நோக்கி பேரணி​யாக சென்​றனர். இந்த போராட்​டத்​தில் ஆசிரியர்​களின் குழந்​தைகள் உட்பட குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அனு​மதி இல்​லாமல் சென்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். இதனால் காம​ராஜர் சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​ய​தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்​பின் ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் சில ஆசிரியர்​களுக்கு லேசான காய​மும், மயக்​க​மும் ஏற்​பட்​டது. மயக்​க மடைந்த ஆசிரியர்கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும் கைது நடவடிக்​கையை புகைப்​படம் எடுக்க முயன்ற ஆசிரியர்​களின் செல்​போன்​களை போலீ​ஸார் பறித்​துக் கொண்​டனர். இதுத​விர பெண்​களை, ஆண் போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தாக​வும் குற்றம் சாட்டப்பட்​டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏராள​மானோர் காம​ராஜர் சாலை​யில் திடீரென போராட்​டம் நடத்​தி​ய​தால், அங்கு கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் வாக​னங்​கள் மாற்​றுப்​பாதை​யில் அனுப்​பப்​பட்​டன.

இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்​டுமென இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் – அண்ணாமலை காட்டம்

Posted by - February 23, 2024 0
  தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை…

ஓபிஎஸ் தாயார் ஓ.பழனியம்மாள் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Posted by - February 25, 2023 0
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார்…

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *