இன்று தமிழகம் வரும் மோடி.!

66 0

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் ஆளாக வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி என அனைத்து பணிகளையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதிமுக. இதற்கு ஏற்ப  கடந்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அதிமுக,

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அடுத்ததாக பாமக, அமமுக தமாகா, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே என பல கட்சிகளும் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த வகையில் தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இந்த கட்சிகள் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையேறவுள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு அதிமுக மற்றும் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணியளவில்  விமானத்தில் புறப்படும் மோடி,  2.15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

இன்று தமிழகம் வரும் மோடி

இதனையடுத்து ஹெலிகாப்டர் மாக்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றடைகிறார். அங்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் கைகோர்க்கவுள்ளனர்.

மீண்டும் கைகோர்க்கும் இபிஎஸ்- டிடிவி

எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனக்கும்  இடையே உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிரிந்து இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக தலைமை எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது.

மேலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக தனி தனி அணியாக போட்டியிட்டது. அப்போதும் வாக்குகள் பிரிந்து தோல்வி அடைந்தது. எனவே எதிர்ப்புவாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தற்போது டிடிவி தினகரனோடு கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

Related Post

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

இன்று தான் கடைசி.!

Posted by - March 4, 2026 0
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.…

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *